"'கோலி' இல்ல, 'டிவில்லியர்ஸ்' இல்ல,,.. இவரு தான் பெங்களூர் டீமோட மேட்ச் 'வின்னர்'..." 'சுனில் கவாஸ்கர்' கை காட்டும் 'வீரர்' யார்??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
13 வது ஐபிஎல் தொடரில் இந்த முறை எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என பல கருத்துகள் பரவி வருகின்றன. ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal Challengers Bangalore), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab), டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் தோல்வியை தழுவியது.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் பெங்களூர் அணி, லீக் தொடரின் மோசமான ஆட்டங்களால் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவற விட்டு வருகிறது. இந்த முறையாவது பெங்களுர் அணி கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'பெங்களூர் போன்ற ஒரு அணி இதுவரை ஏன் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை என்பது புதிராகவே உள்ளது. விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) போன்ற வீரர்கள் உள்ள அணியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் மற்ற வீரர்களும் சொதப்புவதால் தான் தோல்வி பெறுவதாக நினைக்கிறேன்' என்றார்.
மேலும், 'இந்த முறை அணியில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புள்ளது. மிகவும் மெதுவான பிட்ச்களில் சாம்பியன் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அதே போன்ற சமயங்களில் பெங்களூர் அணியின் மேட்ச் வின்னராக சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தான் செயல்படப் போகிறார்' என தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூர் அணியில் இந்த முறை வேகப்பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) மற்றும் கிறிஸ் மோரிஸ் (Chris Morris) அணியில் இணைக்கப்பட்டுள்ளது அந்த அணியின் பந்து வீச்சின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐபிஎல்' மொத 'மேட்ச்'ல இவங்க ஜெயிக்குறதுக்கு... தான் சான்ஸ் 'அதிகம்',,.. 'கம்பீரின்' கணிப்பு மெய்யாகுமா??
- "இவர மாதிரி, ஒரு சிறப்பான 'பிளேயர்' இனிமேலும் 'கிரிக்கெட்'டுக்கு தேவப்படுறாரு.." - 'புகழாரம்' சூட்டும் முன்னாள் 'வீரர்'!!!
- "'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்.." கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'!!!
- VIDEO : "அவருக்கு இன்னும் வயசு ஆகல"... ஜான்ட்டி 'ரோட்ஸ் பிடித்த 'வேற' லெவல் 'கேட்ச்'... 'வாவ்' மோடிற்கு சென்ற 'கிரிக்கெட்' ரசிகர்கள்!!!
- "இது சும்மா 'ட்ரைலர்' தான்... இதுக்கே 'இப்டி'ன்னா... நாங்க ஆளையே தூக்குறவங்க.." 'ரகளை'யை ஸ்டார்ட் செய்த 'தாஹிர்'... வைரலாகும் 'ட்வீட்'!!!
- 'ஐபிஎல்' போட்டியில் காலடி எடுத்து வைக்கும் முதல் 'அமெரிக்க' வீரர்... "எந்த 'டீம்'ல ஆட போறாரு??.." - முழு விவரம் உள்ளே!!!
- "இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு??.." 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்!!!
- VIDEO : "இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்??"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' !! - வைரலாகும் 'வீடியோ'!
- VIDEO : 'practice' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... "போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே..." - வைரலாகும் 'வீடியோ'!!!
- "சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு..." - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'!!!