‘நிறைய வாய்ப்பு கொடுத்தாச்சு’.. பேசாம ‘பாண்ட்யா’-வை தூக்கிட்டு அந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுங்கப்பா.. காட்டமாக பேசிய கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். இதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்ட்யா, சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனை அடுத்து விளையாட வந்த அவர், பவுலிங் வீசுவதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதனை அடுத்து இங்கிலாந்து தொடரில் பவுலிங் வீசினார். ஆனால் அவரது பழைய அதிரடி ஆட்டம் தற்போது இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சமீபகாலமாக பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்ட்யா சொதப்பி வருகிறார்.

தற்போது ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவும் இடம்பெற்றுள்ளார். இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பவுலிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஒரு வீரரை மட்டுமே எப்போதும் உற்று நோக்கிக்கொண்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது, ஆனால் மோசமாக செயல்படும்போது அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை முயற்சிப்பது நல்லது.

ஒரு வீரருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை தவறானது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாம் மாற்று வீரர்களை தயார் படுத்தவில்லை. சமீபத்தில் தீபக் சஹார் நன்றாக விளையாடியுள்ளார். அவரால் பேட்டிங் நன்றாக செய்ய முடிகிறது. அதேபோல் புவனேஷ்வர் குமாரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களை அடித்துள்ளார். அதனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மாற்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்’ என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்