அவர நம்பி '10 ஓவர்'லாம் கொடுக்க முடியாதுங்க...! 'வேணும்னா அவங்க 2 பேரும் சேர்ந்து ஆளுக்கு அஞ்சு அஞ்சா பிரிச்சுக்கலாம்...' - சுனில் கவாஸ்கர் அதிரடி கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இரு அணிகளும் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று (27-03-2021) புனேயில் நடந்தது. இந்தியா அதிகபட்ச ரன்கள் அடித்தாலும், இதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி என்ற கணக்கில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமமாக இருக்கிறது.

                             

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா பவுலிங் போடவில்லை. இங்கிலாந்தில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் ஹார்திக் பாண்ட்யாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை என விராட் கோலி தெரிவித்தார்.

                                      

இந்தநிலையில், மற்றொரு ஆல்ரவுண்டரும் அவரது சகோதரருமான குர்ணால் பாண்ட்யா நேற்றைய ஆட்டத்தில் 6 ஓவர்களை வீசி 72 ரன்களை அள்ளி வழங்கினார்.

                                       

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பெட்டியில், ‘’ இந்திய அணி வீரர்களின் பவுலிங்கை  பென் ஸ்டோக்ஸ் கிழித்து தொங்கவிட்டார். நம்முடைய பவுலிங் பலவீனமாக இருந்தது .

                                

ஏன் சொல்கிறேன் என்றால், குர்ணால் பாண்ட்யா ஐந்தாவது பந்து வீச்சாளராக கண்டிப்பாக இருக்க முடியாது. அவர் பத்து ஓவர்கள் வீசும் ஒரு பந்து வீச்சாளராக இருக்க முடியாது. இந்த மாதிரி மைதானத்தில் எல்லாம் சாஹல் போன்ற ஒரு பவுலர் தான் அவசியம்.

                                       

மேலும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்னால் பாண்ட்யா இருவரும் இணைந்து 10 ஓவர்கள் வீச பெர்மிசன் தரலாம். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டுமானால் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பவுலர்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கும்" என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் தெரிவித்தார்.

நம்முடைய பவுலர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மீது எந்த ப்ரசரும் கொடுக்கவில்லை. அசால்டாக கிழித்து தொங்கவிட்டார்கள். சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு ஸ்பின் பவுலர் இருந்திருந்தால் வேற மாதிரி நேற்றைக்கு மேட்ச் நடந்திருக்கும், என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்