"ஜெயிச்சா மட்டும் போதாது பாத்துக்கோங்க.." ரோஹித், டிராவிட்டை கடுமையாக எச்சரித்த சுனில் கவாஸ்கர்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்த இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 11 டி 20 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்திய அணி, மூன்று தொடர்களையும், அடுத்தடுத்து வென்று பட்டையைக் கிளப்பி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டி 20 போட்டி, இன்று தரம்சாலாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமையேற்று வரும் நிலையில், தொடர்ச்சியாக தொடர்களை வென்று, பல்வேறு சாதனைகளையும் இந்திய அணி புரிந்து வருகிறது. இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடரும் இருப்பதால், அதனை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, நிச்சயம் வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணிக்கு எச்சரிக்கை

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு பெரிய எச்சரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றிருந்த இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, 105 ரன்கள் எடுத்திருந்தது.

சரி செய்ய வேண்டும்

ஆனால், கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்து, இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ஹர்ஷல் படேல் இரண்டு ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர், ஒரு ஓவரில் முறையே 16 மற்றும் 14 ரன்களை கொடுத்தனர். இந்நிலையில், இது பற்றி பேசிய சுனில் கவாஸ்கர், 'கடைசி ஓவர்களில், ரன்களை வாரி வழங்குவது பற்றி தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், இதனை சரி செய்ய வேண்டும். ஏனென்றால், தொடர்ச்சியாக இப்படி இந்திய பந்து வீச்சாளர்கள் செய்து கொண்டே இருக்க முடியாது.

கவலையளிக்கிறது

கடைசி 5 முதல் 6 ஓவர்களில், இந்த போட்டியில் நடந்ததை போல, 80 முதல் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் மீண்டும் அமையலாம். ஷனாகா சிறப்பாக ஆடினார். அதே போல, பும்ரா ஓவரில், நிஷாங்கா அடித்த ஷாட்டினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பும்ரா ஓவரில் அப்படி அடிப்பது எளிதான காரியமல்ல. இந்தியா எளிதில், துடைத்து தள்ளக் கூடிய விஷயமல்ல இது. இந்திய அணியின் டெத் ஓவர் பந்து வீச்சாளர்கள் நிலை கவலையளிக்கும் விதமாக உள்ளது. முதல் 10 ஓவர்களையும், கடைசி 8 ஓவர்களையும்  யார் வீச வேண்டும் என்பது பற்றி, இந்திய அணி  ஆலோசித்து வழி அமைக்க வேண்டும்' என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.

ஆலோசனை

டி 20 போட்டியில், நம்பர் 1 அணியாக இருந்தாலும், உலக கோப்பை போட்டிகள் வரவிருப்பதால், இந்திய அணியிலுள்ள குறை பற்றி, சுனில் கவாஸ்கர் கவனித்து தீர்வுகளை கண்டுபிடிக்க தெரிவித்துள்ளார். இது பற்றி, உடனடியாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர், ஆலோசித்து தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது.

ROHIT SHARMA, IND VS SL, RAHUL DRAVID, SUNIL GAVASKAR, BCCI, INDIAN BOWLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்