கடவுள் கொடுத்த திறமைய 'வேஸ்ட்' பண்ணிட்டு இருக்காரு...! முதல் பந்தே 'கிரவுண்ட' தாண்டி போகணும்னு நினைச்சா எப்படிப்பா...? - இளம் வீரருக்கு 'அட்வைஸ்' கொடுத்த சுனில் கவாஸ்கர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இப்போதெல்லாம் சஞ்சு சாம்சன் ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று (21-09-2021) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. கடைசி பந்து  வரை விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதோடு, கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வெறும் நான்கு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதுகுறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், 'கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது இரண்டாவது அல்லது மூன்றாவது விக்கெட்டிற்கு விளையாட தகுதியான ஒரு வீரர்.

ஆனால், இப்போதெல்லாம் அவர் முதல் பந்தே இருந்தே மைதானத்திற்கு வெளியே பறக்க விட வேண்டும் என ஆசைப்படுகிறார். அடிப்படையில் இது முடியாத காரியம்.

ஒருவேளை அப்படி நடக்கவேண்டும் என்று நினைத்தால் நம்முடைய பேட்டிங் பார்ம் வேஸ்ட் ஆகிவிடும். ஒரு நல்ல பிளேயர் பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன்பிறகே அடிக்க நினைக்க வேண்டும்.

சஞ்சு போன்ற ஒரு நல்ல வீரர் நேற்றைய போட்டியில் 4 ரன்களில் வெளியேறியது எனக்கு வருத்தமளிக்கிறது. கடவுள் அவருக்கு அளித்துள்ள திறமையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருக்கிறது. அதில் நிச்சயம் அவர் கவனம் செலுத்தி மேம்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்