"கோலி செஞ்சத ஈஸியா மறக்க முடியாது".. வங்காளதேச அணியினருடன் ஆவேசம்.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து!! நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Bharat Jodo Yatra : “அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் தெருவில் வந்து நிற்பேன்.” - ராகுல் காந்தி யாத்திரையில் கமல் பேச்சு!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடும் நெருக்கடி உருவாகி இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 227 ரன்களும், இந்திய அணி 314 ரன்களும் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 231 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 145 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருந்த சூழலில், எளிதில் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால், வங்காளதேச அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. 74 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற, அப்போது கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றவும் உதவி செய்தனர்.

ஆறு விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்த அஸ்வின் ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார். இதனிடையே, இந்திய வீரர் விராட் கோலி வங்காளதேச வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. விராட் கோலி அவுட்டாகி வெளியேறும் போது அதனை வங்காளதேச வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடியதுடன் சில வார்த்தைகளையும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த விராட் கோலி, பதிலுக்கு வங்காளதேச வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இந்த விஷயம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இடையே நடந்து பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ், சிராஜிடம் காதில் கேட்காதது போல சைகை காட்டி இருந்தார். அப்போது அவரது விக்கெட்டை சிராஜ் அடுத்த பந்தில் எடுத்ததும் அவரும், கோலியும் இணைந்து லிட்டன் தாஸ் செய்ததையே திருப்பிக் காட்டினர்.

இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். லிட்டன் தாஸ் வங்காளதேச அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதே போல, விராட் கோலி போன்ற உலகின் சிறந்த வீரர் விக்கெட்டை எடுக்கும் போதும் வங்காளதேச அணிக்கும் அப்படி தான் இருக்கும். முதல் டெஸ்டில் கோலி செய்த விஷயத்திற்காக அவர்கள் அப்படி செய்திருப்பார்கள். அப்போது நடந்ததை அவர்கள் சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள்" என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Also Read | "Bigg Boss டைட்டில் வின்னர்".. Elimination ஆன தனலட்சுமிக்கு அசீம் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!

CRICKET, SUNIL GAVASKAR, VIRAT KOHLI, BANGLADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்