தோல்வி அடைந்த இந்திய அணி... Retirement குறித்து சுனில் கவாஸ்கர் சொன்ன பரபரப்பு கருத்து!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலக கோப்பைத் தொடரின் அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மேட்ச் ஆரம்பிச்சதும் வீரர்கள் ஒண்ணு சொன்னாங்க".. தோல்விக்கு பின் மனம்திறந்த டிராவிட்!!

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்றில் பலம் வாய்ந்த அணியாகவும் இந்தியா திகழ்ந்திருந்தது.

இதனையடுத்து, அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது. அதே போல, நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்ததால் 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டி போல இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என்றும் ரசிகர்கள் உற்சாகமாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி இருந்தது. முழுக்க முழுக்க இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி இருந்ததால் இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.

பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கூட இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இதனால், வரும் காலத்தில் அவரை கேப்டனாக நியமிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து வைத்திருப்பார்கள். அதே போல, ஹர்திக் பாண்டியாவும் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக உருவெடுப்பார். சில வீரர்கள் தங்கள் ஓய்வினை அறிவிக்கலாம். சில பேர் இது பற்றி யோசிக்கவும் செய்வார்கள். இந்தியாவின் டி 20 அணியில் சில 30 வயதுக்கும் மேற்பட்ட வீரர்கள் அணியில் தங்களின் இடத்தை மறுபரீசலனையும் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read | "இனி எந்த இந்திய கேப்டனும் பண்ண முடியாது".. தோல்விக்கு பின் கம்பீர் சொன்ன 'அதிரடி' கருத்து!!

CRICKET, T20 WORLD CUP, SUNIL GAVASKAR, T 20 CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்