VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 போட்டியில் மைக் ஒயரில் பந்து பந்து ரன் அவுட்டில் இருந்து தப்பிய ஆஸ்திரேலிய வீராங்கனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி வெளியேற, இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 நேற்று (12.02.2020) ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் பெத் மூணி 71 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஆனால் அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக 144 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் ரன் எடுக்க ஓடி வரும்போது இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே பந்தை வேகமாக ஸ்டெம்பை நோக்கி வீசினார். ஆனால் பந்து ஸ்டெம்புக்கு அருகில் இருந்த மைக் ஒயரில் பட்டு விலகி சென்றது. இதனால் ரன் அவுட்டில் இருந்து மெக் லானிங் தப்பினார். இந்த போட்டியில் மெக் லானிங் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை அவர் ரன் அவுட் ஆகியிருந்தால் போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

CRICKET, BCCI, WOMANCRICKET, VIRAL, RUNOUT, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்