“100% நம்பிக்கையா இருந்தேன்.. கடைசியில் இப்படி ஏமாத்திட்டீங்களே”.. கழட்டி விட்ட இங்கிலாந்து அணியை ‘கடுமையாக’ சாடிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தன்னை பிளேயிங் லெவன் எடுக்காதது குறித்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கடுமையாக சாடியுள்ளார்.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5  போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹப்பா மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னை பிளேயிங் லெவலில் எடுக்காதது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார். அதில், ‘ஆஷஸ் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். ஹப்பாவில் பவுலிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த மைதானத்தில் என்னுடைய ரோல் என்னவென்று என்னிடம் கூறப்பட்ட வரையில் நான் 100% ஹப்பாவில் ஆட தயாரான மனநிலையில் இருந்தேன்.

ஆனால் என்னை உட்கார வைத்தது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது மாராத்தான் ஓட்டம் போன்றது 100 மீட்டர், 200 மீட்டர் போன்று அது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்’ என ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அணியில் எடுக்கப்பட்டார். இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 13 ஓவர்கள் வீசி 102 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அப்போட்டியில் பந்து வீசிய வீரர்களில் இவர்தான் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AUSVENG, ASHESTEST, STUARTBROAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்