மனுசன் எவ்வளவு வேதனையில இருந்தா இப்படியொரு போஸ்ட் போட்டிருப்பாரு.. ஒத்த வார்த்தையில் ‘கண் கலங்க’ வைத்த ரஷீத் கான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடா்ந்து, அந்நாட்டிலிருந்து தங்கள் மக்களை வெளியேற்ற அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் ஆப்கான் குடிமக்களும் தாலிபான்களுக்கு பயந்து சொந்த நாட்டிலிருந்தே வெளியேறி வருகின்றனா். இதனால் காபூலில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனா்.

இந்த சூழலில் நேற்று காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரா்கள் 13 போ் உள்பட 90 போ் உயிரிழந்தனர். மேலும் 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் ஆப்கான் மக்கள் உயிரிழந்ததை எண்ணி அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களான ரஷீத் கானும், முகமது நபியும் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ரஷீத் கான், ‘காபூல் மீண்டும் ரத்தவெள்ளமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதை தயவுசெய்து நிறுத்துங்கள்’ என கண்ணீர் எமோஞ்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் முகமது நபி, ‘காபூல் விமான நிலையம் அருகே நடந்த தாக்குதலில் உயிரிழந்த என் நாட்டு மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த கடினமான சூழலில் இருந்து ஆப்கானிஸ்தான் விடுபடுவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்