‘என்ன மன்னிச்சிருங்க விராட்’.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..! காரணம் என்ன..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான தென் ஆப்பிரிக்க வீரர்களின் பட்டியலில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டூப்ளிஸிஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிகாக் கேப்டனாக நியக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக டூப்ளிஸிஸ் நீடித்து வருகிறார்.

இதில் டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி மற்றும் க்றிஸ் மோரிஸ் போன்ற வீரர்களுக்கு டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டெய்ன், ஒருநாள் மற்றும் டி20 தொடரகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் தேர்வு குழு மீதான தனது அதிர்ப்தியை ட்விட்டரில் பதிவிட்டு வெளிப்படுத்தினார். அப்போது, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் உங்களது வேகம் தேவையில்லை. வரயிருக்கும் முக்கிய போட்டிகளுக்காக உங்களுக்கு அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது என ரசிகர்கள் பதிவிட தொடங்கினர். இது இந்திய அணியை தரம் தாழ்த்துவது போன்ற பிம்பத்தை சமூக வலைதளங்களில் உருவாக்க தொடங்கியது. இதனால் விராட் கோலி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஸ்டெய்ன் ட்வீட் செய்துள்ளார். ஸ்டெய்ன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, DALESTEYN, APOLOGIZES, T20I, FANS, INDVSA, TEAMINDIA, SOUTH AFRICA CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்