"மனுஷன் தண்ணி காட்டிட்டாரு போல".. இந்திய வீரர் செயலால் பிரமிச்சு நின்ன ஸ்மித்.. "Thumbs Up வேற காட்டி இருக்காரே"!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

                     Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

அப்படி இருக்கையில் தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த இரண்டு தோல்விளுக்கும் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் முனைப்புடன் உள்ளது.

மறுபக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் வெல்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இரு அணிகளும் தங்களின் வெற்றிக்கு போராடும் என்பதால் நான்கு டெஸ்ட் போட்டிகளும் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர், சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் ஜடேஜாவின் சுழற் பந்துவீச்சில் அவர்கள் இருவரும் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

Images are subject to © copyright to their respective owners

64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சுமார் ஐந்து மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக ஆட களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


Images are subject to © copyright to their respective owners

தொடர்ந்து முதல்  நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து சற்று அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். மறுபக்கம் ராகுல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.

முதல் நாளில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி உள்ள சூழலில், ரவீந்தர் ஜடேஜாவிடம் ஸ்டீவ் ஸ்மித் தம்ப்ஸ் அப் காட்டியதும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 21-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசி இருந்தார். அப்போது அவர் பந்தை எதிர்கொண்ட ஸ்மித் அதை அடிக்க முடியாமல் திணறிய நிலையில், அந்த பந்து ஸ்டம்ப்க்கு அருகே சென்றது. இதனை பார்த்ததும் ஜடேஜாவை நோக்கி Thumbs Up காட்டினார் ஸ்டீவ் ஸ்மித். தொடர்ந்து, அதே போல ஜடேஜா வீசிய பந்தில் தான் ஸ்மித் அவுட்டாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RAVINDRA JADEJA, STEVE SMITH, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்