‘இப்டி ஒரு கம்பேக்க யாரும் எதிர்பாக்கல’.. சச்சினை பின்னுக்கு தள்ளிய ஸ்மித்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ஸ்டீவ் ஸ்மித் இப்போட்டியில் களமிறங்கினார்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 319 பந்துகளில் இரட்டை சதம் (211) அடித்து அசத்தினார். இதன்மூலம் குறைவான போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். இதில் பிராட்மேன் அடித்த 69 இன்னிங்ஸில் 26 சதங்கள்தான் அதிவேகமாக 26 சதங்களை அடித்த சாதனையாக இருந்து வருகிறது. இதனை அடுத்த இடத்தில் 136 இன்னிங்ஸில் 26 சதங்கள் அடித்து சச்சின் இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் 121 இன்னிங்ஸில் 26 சதங்கள் அடித்து சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்நிலையில் சச்சின் தனது ட்விட்டரில் பக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், ‘சிக்கலான தொழில்நுட்பம், ஆனால் ஒழுங்கான மனநிலை, இதுதான் ஸ்மித்தை வேறுபடுத்தி காண்பிக்கிறது. நம்பமுடியாத மறுபிரவேசம்’ என பதிவிட்டுள்ளார்.

STEVESMITH, SACHINTENDULKAR, TEST, ASHES2019, ENGVAUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்