அவுட் அப்பீல் செய்யும் விஷயத்தில்.. இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் செஞ்ச தந்திரம்.. பரபர பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்து வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | பதற்றத்தில் பயந்து நின்ன மான்.. ஒண்ணுமே பண்ணாம Casual -ஆ நடந்து போன புலி... IFS ஆபீசர் பகிர்ந்த வீடியோ!!

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, 109 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி, 197 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது.

இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய சூழலில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

தொடர்ந்து, 76 ரன்கள் என்ற இலக்குடன் மூன்றாவது நாளில் ஆடியிருந்த ஆஸ்திரேலிய அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 19 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தற்போது தகுதி பெற்றுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா கேப்டனாக 3 ஆவது டெஸ்ட் போட்டியில் செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அவுட் அப்பீல் விஷயத்தில் சில ட்ரிக்குகள் பயன்படுத்தியதாக சில கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்மித் செய்த ட்ரிக்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டிருந்தார் அதே போல அவர் சில டிஆர்எஸ் அப்பீல்களையும் மிக திறம்பட எடுத்தது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவும் அனைத்தையும் மாற்றி இருந்தார். ஆனால் அதே வேளையில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்த சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய முறை ஸ்டம்பிங் அவுட் கேட்டுக் கொண்டபடி இருந்தனர். ஆனால் இதற்கு பின்னால் ஒரு ஐடியா இருந்ததாக தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

அதாவது பேட்டில் பந்து பட்டது போல் சிறிதாக சந்தேகம் தோன்றினால் கூட உடனடியாக ஸ்டெம்பை கீப்பர் அடித்து ஸ்டெம்பிங் என அப்பீல் செய்கின்றனர். அப்படி ஸ்டம்பிங் அப்பீல் செய்யும் பட்சத்தில் களநடுவர் மூன்றாவது நடுவருக்கு முடிவை மாற்றுவார். அப்போது ஸ்டம்பிங் மட்டும் இல்லாமல் பேட்டில் பந்து உரசியதா, இல்லையா என்பதையும் பார்ப்பார்கள். அதன் பின்னர் தான் ஸ்டம்பிங் சோதனை செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் பேட்டில் பந்து பட்டிருந்தாலும் கூட அது விக்கெட்டாக கிடைக்கும்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படி கூட பிளான் பண்ணலாமா?

பேட்டில் பட்டதா என சந்தேகம் இருப்பதால் டிஆர்எஸ் எடுக்கும் பட்சத்தில் அந்த ரிவ்யூவை இழக்க நேரிடும். எனவே தங்களுடைய ரிவ்யூவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்டம்பிங் செய்த முறையை பயன்படுத்தி சாதகமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அப்பீலை பயன்படுத்திக் கொண்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல், லூப்ஹோல்களை ஸ்மித் சிறப்பாக பயன்படுத்தினார் என்றும் ஸ்டம்பிங் என்பது உறுதியாக இல்லை என்றால் நிச்சயம் மூன்றாம் நடுவருக்கு கள நடுவர் முடிவை மாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டம்பிங் அப்பீல் செய்யும் சமயத்தில் நடுவர்களுக்கு சந்தேகம் இருந்தால் கூட மூன்றாம் நடுவர் அதை பரிசோதிக்கும் போது ஸ்டம்பிங்கை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்றும் பேட்டில் பந்து பட்டதா, இல்லையா என்பதை பரிசோதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read | இந்திய வீரர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்.. அஸ்வின் செஞ்ச செம சம்பவம்.. ரோஹித் வேற உள்ள வந்துட்டாரு.. பரபர வீடியோ!!

CRICKET, STEVE SMITH, LOOPHOLES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்