'இவருக்கு வயசாகல!'.. மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘வீரர்’!.. கோலி, சச்சினின் சாதனையும் முறியடிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிட்னியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலாக பேட்டிங் செய்த ஸ்மித் இந்த ஆட்டத்தில் 226 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து சதமடித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய லாபுஷேன் 196 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.ஸ்மித், லாபுஷேன், புகோவ்ஸ்கி ஆகியோர் தான் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பங்களிப்பு செய்தனர். 


இந்திய அணியைப் பொருத்தவரை பும்ரா, சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆனால் டி20 போட்டி போல, ஷைனி 13 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கினார்.

ஸ்மித், லாபுஷேன் இருவரும் பும்ரா, சிராஜ் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தனர். கடந்த இரு போட்டிகளில் செய்த எந்தத் தவறையும் பேட்டிங்கில் ஸ்மித் செய்யவில்லை. பும்ரா வீசிய சில அருமையான லெக் கட்டர்களை லீவ் செய்து ஸ்மித் தனது பேட்டிங் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் மழை குறுக்கிட்டு ஃப்ளோ தடை பட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

நிதானமாக ஆடிய ஸ்மித் 116 பந்துகளில் அரை சதம் அடித்து ஃபார்முக்கு வந்தார். பின்னர் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டார்க், ஸ்மித்துடன் சேர்ந்து அதிரடியாக ஆடி ஷைனியின் பந்துவீச்சில் பவுண்டரிகளையும் சிக்ரையும் ஸ்டார்க் விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

200 பந்துகளைச் சந்தித்தது இந்தியாவுக்கு எதிரான தனது 8-வது சதத்தை ஸ்மித் அடித்தார்.  அதன் பின்னர் 9-வது விக்கெட்டுக்கு வந்த நாதன் லேயானும், நிதானமாக ஆடிய ஸ்மித் 131 ரன்களிலும் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
எனினும் தனது சதத்தால் ஸ்மித் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.  முதல் இன்னிங்ஸில் மொத்தம் 338 ரன்கள் எடுத்த ஸ்மித் இத்துடன் கோலியின் 27 டெஸ்ட் சதங்களை சமன் செய்தார்.

ALSO READ: 'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்!'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் மட்டுமே ஸ்மித்தை விட வேகமாக 70 இன்னிங்ஸ்களில் 27 டெஸ்ட் சதங்களை அடித்தார். ஸ்மித் தனது 27 வது டெஸ்ட் சதத்தை அடிக்க 136 இன்னிங்ஸ்கள் எடுத்துக் கொண்டார். கோலி மற்றும் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இதற்காக 141 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்