"முக்கியமான மேட்ச்'ல இப்டி தான் ஆடுவீங்களா??.." கொந்தளித்த 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. "அவரு நல்லா தானே ஆடுனாரு!.." ஆதரவாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய 'பிளெம்மிங்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, இந்த சீசனில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது.
இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, மூன்றில் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதில், நேற்று கொல்கத்தா (KKR) அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 220 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால், சென்னை அணி வெற்றி எளிதில் வெற்றி பெறும் என அனைவரும் கருதிய நிலையில், ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர், அதிரடியாக ஆடி, சென்னை அணியை கதி கலங்கச் செய்தனர். இறுதி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. இதனிடையே, முதல் பந்திலேயே பிரஷித் கிருஷ்ணா ரன் அவுட்டாக, சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை வீரர் தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாம் குரான் ரசலின் விக்கெட்டை எடுத்தாலும், அவரது ஒரே ஓவரில் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மற்றொரு பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 3.1 ஓவர்களில், விக்கெட்டுகளை எதையும் கைப்பற்றாமல், 48 ரன்கள் வாரி வழங்கினார். சென்னை அணி இந்த தொடரில் வெற்றிகளைக் குவித்து வந்தாலும், பந்து வீச்சுத் துறை சற்று மோசமாகவே உள்ளது.
இதுவரை, 4 போட்டிகளில் சேர்த்து 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ள ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur), ரன்களையும் அதிகமாக வாரி வழங்கியுள்ளார். இதனால், அடுத்த போட்டியில், வேறு இளம் வீரர் ஒருவரை ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, அணியில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் (Stephen Fleming), 'ஆம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி, சற்று கொடூரமாகத் தான் இருந்தது. ஷர்துல் தாக்கூர் நன்றாக தான் பந்து வீசினார்.
ரன்களைக் கட்டுப்படுத்த சில முயற்சிகளை அவர் எடுத்துக் கொண்டார். ரசல், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸ் போன்ற ஹிட்டர்கள் இருக்கும் போது, பவுலர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவது என்பது கடினமான ஒன்று. அவர் யார்க்கர் பந்துகளை வீசுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், அவர் சிறப்பாக தான் செயல்பட்டார் என நான் நினைக்கிறன்' என தாக்கூருக்கு ஆதரவாக பிளெம்மிங் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் பயிற்சி பிளெம்மிங் இப்படி கூறியுள்ளதால், அடுத்த போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் தான் களமிறங்குவார் என தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரொம்ப திமிரா இருக்க கூடாது...' 'அவங்க ரெண்டு விக்கெட் கூட வச்சிருந்தாங்கன்னா...' நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்...? - தோனி காட்டம்...!
- ‘இதை பத்தி அவர்கிட்ட பேசுனேன்’!.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தோனியின் ‘பெற்றோர்’ மருத்துவமனையில் அனுமதி.. சிஎஸ்கே கோச் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- ‘போராடி தோத்த வலியே இன்னும் ஆறல’!.. அதுக்குள்ள அடுத்த அதிர்ச்சியா..! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுற மாதிரி வந்த செய்தி..!
- 'சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை'!.. 'தான் யார் என்று நிரூபித்த ருத்துராஜ்'!.. தோனி 'கணக்கு' தப்பாகுமா!.. ஒரே போட்டியில் இப்படி ஒரு கம்பேக் எப்படி?
- 'இருக்குற இடம் தெரியாம... இருந்துட்டு போயிடலாம்னு பாத்தா... விட மாட்றாங்களே'!.. தொடர்ந்து சொதப்பல் ஆட்டம்!!.. வசமாக சிக்கிய சிஎஸ்கே பவுலர்!
- 'இவர் கிட்ட என்ன இல்ல?.. எல்லா தகுதியும் இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக இவரு தான் வரணும்'!.. கொளுத்திப் போட்ட மைக்கேல் வாகன்!
- "'ஐபிஎல்' மட்டும் முடியட்டும்.. அடுத்து என்ன பண்ண போறேன்னு பாருங்க".. ட்விட்டரில் 'ரெய்னா' போட்ட 'கமெண்ட்'.. "ஓஹோ, அப்போ 'கன்ஃபார்மே' பண்ணிட்டீங்க போல!!"
- "இந்த விஷயத்துல அவர அடிச்சுக்கவே முடியாது.. செம 'புத்திசாலி'ங்க அவரு.." 'தோனி'யின் 'சீக்ரெட்' பற்றி மனம் திறந்த 'சேவாக்'!!
- "அந்த 'மனுஷன்' சும்மா தீயா வேல செய்யுறாருங்க.. நல்லா 'enjoy' பண்ணியும் ஆடுறாரு.." சக 'சிஎஸ்கே' வீரரை பாராட்டித் தள்ளிய 'சாம் குர்ரான்'!!
- "உங்கள எப்ப தான் 'டீம்'ல பாக்குறது??.." ஆவலுடன் 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'.. அசத்தல் 'பதில்' சொல்லி நெகிழ வைத்த 'தாஹிர்'.. வைரலாகும் 'ட்வீட்'!!