மாயாஜால மைதானம்.. மேட்ச் முடிஞ்சதும் காணாமல்போக இருக்கும் ஸ்டேடியம்.. FIFA உலகக்கோப்பையில் சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் ஸ்டேடியம் 974 மொத்தமாக அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வாயிலேயே விழுந்த பந்து.. பறிபோன 4 பற்கள்.. இலங்கை வீரருக்கு கிரவுண்ட்ல நடந்த சோகம்.. வீடியோ..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

காலிறுதி போட்டிகள் ஒருபக்கம் சூடுபிடித்துள்ள நிலையில் கத்தாரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டேடியம் 974 எனும் மைதானம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் முழுவதும் கன்டெய்னர்கள் மற்றும் இரும்பு பொருட்களால் கட்டப்பட்டிருக்கிறது. இதில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் முடிவடைந்த பின்னர் உடனடியாக இந்த மைதானம் பாகம் பாகமாக பிரிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும், அண்டை நாடுகளுக்கு மறு சுழற்சிக்காக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 2030 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரை உருகுவே நடத்தும் வாய்ப்பை பெற்றால் அந்நாட்டுக்கு இவை வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மைதானத்தில் மாலை நேர போட்டிகளை மட்டுமே நடத்த கத்தார் முடிவெடுத்தது. காரணம் இங்கே ஏர் கண்டிஷன் வசதி இல்லை என்பதுதான். கத்தாரில் இதனுடன் சேர்த்து மொத்தமாக 7 மைதானங்கள் இருக்கின்றன. இந்நிலையில், மற்ற ஆறு மைதானங்களும் வழக்கமான நிலையான வடிவமைப்பை கொண்டிருப்பவை. அவை உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பிரேசில் - தென் கொரியா இடையேயான போட்டிக்கு பிறகு உடனடியாக இந்த மைதானம் அங்கிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்திற்கு அருகிலேயே இந்த மைதானம் அமைந்திருப்பதால் இந்த பொருட்களை எளிதில் வேறு நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ரியாக்ஷன் என்ன?

STADIUM 974, QATAR, QATAR WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்