'இவரயெல்லாம் ஒலிம்பிக்குக்கு அனுப்புங்க பா'... 'உசைன் போல்ட்' ரெக்கார்ட் ஜஸ்ட் மிஸ்!... கம்பளா விளையாட்டில் பட்டைய கிளப்பிய இந்த இளைஞர் யார்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கம்பளா விளையாட்டில் 142.50 மீ தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து, கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மியாரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர், ஸ்ரீநிவாச கௌடா. இவர், அப்பகுதியில் கட்டட வேலை செய்யும் தொழிலாளி ஆவார். கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா மீது இவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது. இதனால், வேலை நேரம் போக கம்பளா போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த கம்பளா போட்டியில் பங்கேற்ற ஸ்ரீநிவாச கௌடா, மின்னல் வேகத்தில் எருமைகளை விரட்டினார். சுமார், 142.50 மீட்டரை வெறும் 13.62 விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கம்பளா விளையாட்டைப் பொறுத்தவரை, இது ஒரு அசாத்தியமான நிகழ்வாகும். உலகின் அதி வேக மனிதர் என்று புகழப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், 100 மீட்டர்களை 9.52 விநாடிகளில் கடந்து ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்திருந்தார். அந்த வகையில், ஸ்ரீநிவாச கௌடாவின் வேகத்தை கணக்கிடும் போது, 100 மீட்டர்களை 9.55 விநாடிகளில் கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஸ்ரீநிவாச கௌடா பேசுகையில், 'நான் இவ்வளவு வேகமாக ஓடுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. போட்டியில், எருமைகள் வேகமாக ஓடியதால் அவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஓடினேன்' என்றார்.

KARNATAKA, KAMBALA, RECORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்