"இலங்கை ஆசிய கோப்பை ஜெயிச்சதுக்கு".. CSK'வும் ஒரு காரணமா??.. இலங்கை கேப்டன் சொன்ன விஷயம்!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர், சமீபத்தில் நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | "அட, சொன்ன மாதிரியே டி 20 World Cup'க்கும் செலக்ட் ஆயிட்டாரே!!".. உற்சாகத்தில் ரசிகர்கள்.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது"..

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் காரணமாக, இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.

தொடர்ந்து, இறுதி போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், பானுகா ராஜபக்ஷாவின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது. பானுகா ராஜபக்ஷா ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, பெரிய அளவில் ரன் குவிக்க திணறியதால், 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஆறாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது.

இதனிடையே, போட்டிக்கு பின்னர் இலங்கை கேப்டன் ஷனாகா, சிஎஸ்கேவை குறிப்பிட்டு பேசிய விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இது பற்றி பேசும் தசுன் ஷனகா, "2021 ஆம் ஆண்டு, ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றிருந்தது. அது தான் எங்களின் மனதில் இருந்தது. எங்களுக்கு அதிக உத்வேகமும் கொடுத்தது. எங்களின் இளம் வீரர்களுக்கும் இங்குள்ள சூழ்நிலை நன்கு தெரியும். ஐந்து விக்கெட்டுகள் போன பிறகு ஹசரங்கா சிறப்பாக செயல்பட்டார். கடைசி பந்தில் சிக்ஸ் சென்றது திருப்புமுனையாக இருந்தது.

ஒரு இளம் வீரராக மதுஷங்கா சிறப்பாக பந்து வீசுவார் என தெரியும். அதன் படி, அவருக்கு முழு ஆதரவு கொடுத்ததால் தனது திறனையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தி காட்டினார்" என கூறி உள்ளார். இலங்கை அணி முதல் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதற்கு பின்னால், சிஎஸ்கே அணியின் தாக்கம் இருந்தது தொடர்பான செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Also Read | ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"

CRICKET, SRILANKA CAPTAIN, CSK, ASIA CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்