போடு.. ஐபிஎல் ஏலம்.. அன்றே கணித்த ஸ்ரீகாந்த்.. அப்படியே நடந்துருக்கே.. வியந்த ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "அடேங்கப்பா".. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்ததும் CSK-வில் நடந்த அற்புதம். "இத யாரும் எதிர்பார்க்கலையே"

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.

இந்த நிலையில், தற்போது பல வீரர்கள் சிறப்பான தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போய்க் கொண்டிருக்கின்றனர். அதுவும் சுமார்  நான்குக்கும் மேற்பட்ட வீரர்கள் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஏலத்தில் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போய் வரலாறு படைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அதே வேளையில், மறுபக்கம் ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல வீரர்களும் Unsold என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சரியாக கணித்த விஷயம் ஒன்று பெரிய அளவில் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ள வீடியோவில், அவரது மகன் அனிருத்தாவுடன் கலந்துரையாடுகிறார் ஸ்ரீகாந்த்.

அப்போது, இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எந்தெந்தெ வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்ற கேள்வியை அனிருத்தா முன் வைக்கிறார். இதற்கு பதில் சொல்லும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், "சாம் குர்ரானுக்கு 2, 3 டீம் போவாங்க. சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன் இவங்க 3 பேருல யாரு அதிகம் போக போறாங்கன்னு தெரியல. இவங்க 3 பேருல ஒருத்தர் தான். சாம் குர்ரான் எல்லாம் 20 கோடி ருபாய் வரை போகலாம்" என கூறி இருந்தார்.

அவர் அப்போது கூறியது போலவே, சாம் குர்ரான் அதிக விலைக்கு போயுள்ள அதே சூழலில், இவருக்கு அடுத்தபடியாக ஸ்ரீகாந்த் கூறிய கேமரூன் க்ரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | பென் ஸ்டோக்ஸ்-ஐ தட்டித் தூக்கிய CSK.. அணிக்குள் வந்ததும் ஆல் ரவுண்டர் போட்ட அசத்தல் ட்வீட்!! போடுறா வெடிய 🔥🔥!!

CRICKET, SRIKKANTH, SRIKKANTH PREDICTION, IPL AUCTION 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்