‘இளைஞர்களுக்கு வழி விட்ற நேரம் வந்துருச்சு’.. யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘திடீரென’ ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உடானா (Isuru Udana) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இவர், இலங்கை அணிக்காக 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளும், 35 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.

ஓய்வு குறித்து கூறிய இசுரு உடானா, ‘அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து உள்ளூர் மற்றும் 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இசுரு உடானா விளையாடினார். அதில் ஒருநாள் தொடரில் முதல் போட்டியிலும், டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. குறையான சர்வதேச போட்டிகளிலேயே விளையாடியுள்ள இசுரு உடானா, திடீரென ஓய்வை அறிவித்தது இலங்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்