'விளையாட போனா இப்படியா பண்றது'... 'தொக்காக போட்டு கொடுத்த வீடியோ'... இலங்கை வீரர்களுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை வீரர்கள் மீது அந்நாட்டு கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக வென்றுள்ளது.

இதனிடையே இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவது கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இங்கிலாந்தில் இலங்கை வீரர்கள் செய்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிந்துள்ளனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக பயோ பபுள் விதி கடுமையாக அமலில் உள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறியதன் காரணமாகச் சம்மந்தப்பட்ட வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எல்.சி தலைவர் Shammi Silva தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் கூறினார். அதோடு அடுத்த விமானத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவோம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில்  அவர்கள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என Shammi Silva கூறினார்.   

இதற்கிடையே ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாகச் சென்றுவிட்டது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்