'அவர ஓப்பனிங் பேட்ஸ்மேனா களமிறக்குங்க'... 'இல்லனா, மரத்தில் ஏறி பயங்காட்டிய ரசிகர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர் ஒருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றும்படி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் 14-ந் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இலங்கை அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங்கின்போது, 30 வயதான ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா 8-வது நபராக களமிறக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர் ஒருவர், ‘பேட்டிங்’ வரிசையில் திசாராவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கும் வரை போராட்டம் நடத்துவேன் என மரத்தில் ஏறி ரசிகர் ஒருவர் போராட்டம் நடத்தினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்டு, ‘பிரமாதம்.... அவனை அப்பிடியே மரத்துமேலேயே உட்கார வைங்க’ என தெரிவித்துள்ளார். இதனிடையே, கார்டிப்பில் செவ்வாய்கிழமையன்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. அதில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்