‘மலிங்காவை தொடர்ந்து மற்றொரு வீரர் ஓய்வு’... ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு அறிவித்ததையடுத்து, மற்றொரு இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான குலசேகரா உடனடியாக ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை அணியின் மூத்த வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. வரும் ஜூலை மாதம் 26-ம் தேதி, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அந்த ஆட்டத்தில் பங்கேற்றபின் ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலக உள்ளார் லசித் மலிங்கா. இந்நிலையில் இலங்கையின் மற்றுமொரு மூத்த வீரரான நுவன் குலசேகரா தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
37 வயதான குலசேகரா, இலங்கை அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளிலும், 184 ஒருநாள், 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2014-ல் டி20 கோப்பையை வென்ற இலங்கை அணியில் குலசேகராவும் இருந்தார். 2017-க்கு பிறகு அவருக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இலங்கை அணி புதிய வீரர்களால் தடுமாறி வரும் நிலையில், குலசேகராவின் ஓய்வு அறிவிப்பு மற்றுமொரு அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த ஒரு சம்பவம் போதும்'...அந்த செகண்ட்ல இருந்து 'தோனி ரசிகை'... மனம் திறந்த 'பாகிஸ்தான் நடிகை'!
- 'கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்லும்'... 'மும்பை அணியின்' செல்ல பிள்ளை'... பயிற்சியாளர் ஆகிறாரா?
- 'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!
- 'இதுக்கு ஒரு எண்டே இல்லையா'...'என்ன ராசி இது,இப்படி மோசமா துரத்துது'...சோகத்தில் பிரபல வீரர்!
- 'உங்க முடிவுல எங்க 'இதயமே நொறுங்கி போச்சு'...'வீரரின் உருக்கமான ட்வீட்'... ஆறுதல் சொன்ன அஸ்வின்!
- 'நீங்க எவ்வளவு கெத்தா இருந்தீங்க'... 'விளையாட தடை விதித்த 'ஐசிசி'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
- 'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'!
- 'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா'?... 'இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு'!
- 'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'?...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ!
- 'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!