'எதுக்கு சார்... கேப்டனோட சண்ட போட்டீங்க'?.. இலங்கை முன்னாள் வீரரின் மனக்குமுறல்!.. கிழித்து தொங்கவிட்ட இலங்கை பயிற்சியாளர் ஆர்த்தர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணியின் கேப்டன் ஷனகாவுடனான மோதல் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியின்போது வெற்றி வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை அணி நழுவவிட்டது. இதனால் விரக்தியடைந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் பெவிலியினில் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டார்.

அதன் பிறகு மைதானத்துக்குள் கோபமாக சென்ற அவர், கேப்டன் ஷனகாவுடன் வாக்குவாதம் செய்தார். அப்போதும் கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்ணால்டு, "பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையிலான உரையாடல் பெவிலியன் உள்ளே நடக்க வேண்டுமே தவிர, மைதானத்தில் நடக்க கூடாது" என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மிக்கி ஆர்த்தர் காரசாரமான பதிலை அளித்திருக்கிறார். அதில், "நாங்கள் வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாகவே சந்திக்கிறோம். இப்போது நிறைய கற்றும் வருகிறோம். நானும், ஷனகாவும் இந்த அணியை வளர்க்க பாடுபடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நாங்கள் இருவருமே இப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததை முடிக்க முடியவில்லை. நீங்கள் பார்த்தது ஆரோக்கியமான உரையாடல்தான். அதில் தவறு ஏதும் இல்லை, அதை தவறாகவும் சித்தரிக்க வேண்டாம்" எனவும் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்