SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சரியாக அமையவில்லை. முதல் 2 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியது. அதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இதன்பின்னர் புது உத்வேகத்துடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, அடுத்த எதிர்கொண்ட சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தியது. இதேபோல நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த குஜராத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புகிறது என ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் முன்னணி வீரராக உள்ள வாஷிங்டன் சுந்தர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, ‘வாஷிங்டன் சுந்தருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பிசியோதெரபிஸ்ட் கவனித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு அவர் பவுலிங் வீசுவது கடினம்’ என அவர் கூறியுள்ளார். .

வாஷிங்டன் சுந்தர் இல்லாதது ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு போட்டியில் பேட்டிங்கில் 14 பந்துகளில் 40 ரன்களை பறக்கவிட்டு அசத்தினார். அதேபோல பவுலிங்கிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!

CRICKET, IPL, IPL 2022, SRH, SUNRISERS HYDERABAD, ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்