'விஜய்' ரசிகர்களுக்கு.. 'வார்னர்' கொடுத்த வேற 'லெவல்' சர்ப்ரைஸ்!.. இணையத்தில் ஹிட்டடித்த 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனின் மூன்றாவது போட்டியில், நேற்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் (Warner), தன்னுடைய அணியின் சக வீரர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில், வெளியாகியிருந்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங்' என்ற பாடல், பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது.

அது மட்டுமில்லாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியிலும், இந்த பாடல் அதிகம் வைரலாகியிருந்தது. தினேஷ் கார்த்திக், அஸ்வின், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள், அடுத்தடுத்து இந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, இந்திய வீரர்களுக்கு மத்தியில், அதிகம் வைரலான இந்த பாடல், தற்போது வெளிநாட்டு வீரர்களையும் கவர்ந்துள்ளது.

ஹைதராபாத் அணியிலுள்ள வெளிநாட்டு வீரர்களான வார்னர் மற்றும் ரஷீத் கான் (Rashid Khan) ஆகியோர், இந்திய வீரரான புவனேஷ்வர் குமாருடன் இணைந்து, வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளனர்.



ஏற்கனவே, டிக் டாக் மூலம் அதிக பிரபலமான வார்னர், தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளது,  கிரிக்கெட் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்