VIDEO: அப்போ அது அவுட் இல்லையா..? அவசரப்பட்டு நடையைக் கட்டிய பொல்லார்டு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டுக்கு (Pollard) நாட் அவுட் கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 11-வது ஓவரை ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசனார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட பொல்லார்டின் காலில் பட்டு பந்து சென்றது.

இதனால் அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார். உடனே மூன்றாம் அம்பயரிடம் பொல்லார்டு ரிவியூ (DRS) கேட்டார். இதனை அம்பயர் பார்த்துக் கொண்டிருந்தபோது, பந்து பேட்டில் படாமல் நேராக காலில் பட்டது தெரிந்ததும், அவுட் என நினைத்த பொல்லார்டு கை கிளவுஸை கழற்றிவிட்டு பெவிலியன் திரும்பினார்.

ஆனால் பந்து ஸ்டம்பிற்கு நேராக செல்லாமல், மேலே சென்றது ரிவியூவில் தெரியவந்தது. இதனால் மூன்றாம் அம்பயர் அதை நாட் அவுட் என அறிவித்தார். இதனை அடுத்து மீண்டும் பொல்லார்டு பேட்டிங் செய்ய வந்தார். ஆனாலும் அபிஷேக் ஷர்மா வீசிய அடுத்த ஓவரில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து பொல்லார்டு (13 ரன்கள்) வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்