VIDEO: அம்மாடியோவ்..! மரண அடின்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. முதல் பாலே எப்படி அடிக்கிறாருன்னு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டி இன்று (08.10.2021) அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், மனிஷ் பாண்டே (Manish Pandey) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன் (Ishan Kishan) களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதில் இஷான் கிஷன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலே சிக்சர் அடித்து மிரட்டினார். இதனால் பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை குவித்தது.

இந்த சமயத்தில் ரஷித் கான் வீசிய 6-வது ஓவரில் ரோஹித் ஷர்மா (18 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யாவும் 10 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் மறுமுனையில் இஷான் கிஷன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அப்போது 84 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்திருந்தபோது உம்ரான் மாலிக் (Umran Malik) வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் அவுட்டானார்.

இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என நாலாபுறமும் சிதறடித்து 82 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது. இந்த நிலையில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை ஹைதராபாத் அணி விரட்டி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்