மலிங்காவின் 10 வருச சாதனையை சமன் செய்த SRH இளம் புயல்.. இதுதான் வேறலெவல் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை உம்ரான் மாலிக் சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், எய்டன் மார்க்கம் 56 ரன்களையும் குவித்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 199 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஆனாலும் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதற்கு காரணம் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் ஹைதராபாத் அணி திணறி வந்தது. அப்போது உம்ரான் மாலிக் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் இலங்கை அணியின் ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 வீரர்களை போல்ட் செய்த பவுலர்களாக மலிங்கா மற்றும் சித்தார்த் திரிவேதி ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான மலிங்கா 4 வீரர்களை கிளீன் போல்ட் ஆக்கினார். அதேபோல் சித்தார்த் திரிவேதி 2012-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக 4 வீரர்களை கிளீன் போல்டாக்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது 10 ஆண்டுகள் கழித்து உம்ரான் மாலிக், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 4 வீரர்களை கிளீன் போல்டாக்கி இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாருங்க இந்த பையன்?.. தனி ஒருவனாய் GT அணியை மரண காட்டு காட்டிய SRH பவுலர்..!
- "முரளிதரன் இப்படி கோவப்பட்டு பாத்ததே இல்ல.." கடுப்பில் கத்திய ஜாம்பவான்.. பரபரப்பு பின்னணி..
- "முதல் தடவ ஐபிஎல் மேட்ச்'ல பேட்டிங்.." 6 பந்துகளில் 25 ரன்.. 'World Class' பவுலரையே பொளந்து கட்டிய இளம் வீரர்.. "யாருங்க இவரு?"
- இப்டி கூட மேட்ச் மாறுமா??.. "CSK vs MI" போட்டியை மிஞ்சிய Climax.. கடைசி இரண்டு பந்துகளில் காத்திருந்த ட்விஸ்ட்..'
- "இப்ப பாரு, யார்க்கர் எப்படி போடுறேன்னு.." பந்துடன் கெத்தாக கிளம்பிய ரோஹித்.. கடைசி'ல நடந்தத பாக்கணுமே.. 'செம' வீடியோ!!
- "அவர விட நானே சூப்பரா பவுலிங் போடுவேன்.." பிராவோவை பங்கமா செஞ்ச தோனி.. "Thug Life குடுக்குறதுல தல தல தான்யா.."
- "எப்பதான் அந்த பையனுக்கு சான்ஸ் குடுப்பீங்க??.." Waiting-ல் இருந்த CSK ரசிகர்கள்.. பிளமிங் சொன்ன வைரல் பதில் என்ன?
- First Half போட்டியில் டாப் கியர்.. Second Half'ல ரிவர்ஸ் கியர்.. "RCB-யின் பின்னடைவுக்கு காரணங்கள் இதுவா??..
- ‘அப்படி போடு’.. முதல்ல ஹர்பஜன் சிங், இப்போ நம்ம அஸ்வின்.. வேறலெவல் சம்பவம்..!
- "Practice பண்ற நேரத்துலயும் ஒரு நியாயம் வேணாமா??.." நாற்காலியை உடைத்த பிரபல 'KKR' வீரர்.. வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்..