‘வீசுன முதல் பாலே க்ளீன் போல்ட்’.. KKR-ன் முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கிய ‘நட்டு’.. வேறலெவல் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை தமிழக வீரரான நடராஜன் அடுத்தடுத்து அவுட் செய்து அசத்தினார்

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று (15.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். அதில் 6 ரன்கள் எடுத்திருந்த போது தமிழக வீரரான நடராஜன் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கிளீன் போல்ட்டாகி வெங்கடேஷ் ஐயர் வெளியேறினார். இதனை தொடர்ந்து ஆல்ரவுண்டர் சுனில் நரேனும் (6 ரன்கள்) நடராஜன் ஓவரில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் ஆட்டம் கண்டு தடுமாறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி, அடுத்து நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதனால் இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற ஹைதராபாத் அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SRH, KKR, IPL, NATARAJAN, VENKATESHIYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்