Video: 18 வயது இளம்புயலை 'இறக்கி' விட்ட கேப்டன்... யாருப்பா இந்த பையன்? 'போட்டிபோட்டு' தேடும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னணி வீரர்களுக்கு இணையாக இளம்வீரர் ஒருவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு உள்ளூர் வீரர் மேட்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்பவராக இருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் இவ்வாறு இருப்பதால் ரசிகர்களும் போட்டியை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

அதேபோல நேற்று ஹைதராபாத் அணி காஷ்மீரை சேர்ந்த 18 வயது அப்துல் சமத்தை களமிறக்கியது. கடைசி கட்டத்தில் களமிறங்கிய சமத் எந்தவொரு பயமும் இன்றி 7 பந்துகளில் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸ் அடித்து 12 ரன்கள் குவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாருப்பா இந்த குட்டி பையன்? என கூகுளில் போட்டிபோட்டு தேட ஆரம்பித்து இருக்கின்றனர்.

வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடித்து ஆட திணறி ஓடி,ஓடி ரன்கள் குவித்த நிலையில் அசால்ட்டாக சிக்ஸ் பறக்க விட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்த இளம்புயலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 171 ஆக உள்ளது. முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணின் கண்டெடுத்த முத்து இந்த அப்துல் சமத் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்