அவரு இருக்கிறப்போ 'அந்த பிரச்சனை' இல்லாம இருந்துச்சு...! 'போட்டியில் இருந்து வார்னர் வெளியேற்றப்பட்ட நிலையில்...' - அவரோட சகோதரர் பகிர்ந்த வைரல் பதிவு...'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா காலத்திலும் ஐபில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

ஐபில் கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (02-05-2021) நடைபெற்ற 28-வது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியுள்ளது. அதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதில் குறிப்பாக தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 64 பந்தில் 124 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வி அடைந்தது.

இதன்காரணமாக டெல்லி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரிஷப் பண்ட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இன்னொரு புறம், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்தனர்.

அதேபோல், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இருந்தும் வார்னரை வெளியேற்றிவிட்டனர். இவருக்கு பதிலாக முகமது நபி இடம்பெற்று விளையாடினார். இந்த சம்பவம் டேவிட் வார்னரின் ரசிகர்கள் அனைவரும் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்சசைகள் கிளம்பி வருகின்றனர்.

டேவிட் வார்னர் ஏதும் சொல்லவில்லை என்றாலும், அவரின் சகோதரர் ஸ்டீவ் தனது இன்ஸ்டாகிராமில் 2014-ம் ஆண்டில் இருந்து வார்னரின் புள்ளிவிவரங்களை ஒன்றிணைத்து பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளதாவது, 'ஹைதராபாத் அணியை பல ஆண்டுகளாக வெற்றி நோக்கி கொண்டு வந்தது வார்னர் தான். அவர் இருக்கும் அணியில் தொடக்க வீரர்கள் பிரச்சனை இல்லை. மிடில் ஆர்டரில் நல்ல ரன்களை அடித்து தரும் ஒரு வீரர் தான் தேவை' என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்