யாரு சாமி இவரு..! மனுசன் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல பந்து போடுறாரே.. ஸ்பீடு எவ்ளோ தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் மின்னல் வேகத்தில் பந்துவீசி முன்னாள் வீரர்கள் பாராட்டைப் பெற்று வருகிறார்.

Advertising
>
Advertising

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவியது. இதில் லக்னோ அணியின் ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வேகமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றைய போட்டியில் 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் பந்து வீசி எதிரணியை மிரள வைத்தார். அதனால் ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக பந்து வீசிய வீரருக்கான விருது உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் உள்ளிட்டோர் உம்ரான் மாலிக் பாராட்டியுள்ளனர்.

SRH, IPL, UMRANMALIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்