‘இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள இப்படியொரு சோதனையா’!.. ஆல்ரவுண்டர் எடுத்த திடீர் முடிவு.. என்ன செய்யப்போகிறது SRH?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 14-வது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறும் 2 மாத காலம் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டும். இது தனக்கு சோர்வைத் தரும் என்றும், கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் (Bio-secure Bubble) இருக்க விருப்பம் இல்லை என்றும் மிட்செல் மார்ஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது முடிவை பிசிசிஐ மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியிடம் அவர் தெரிவித்துவிட்டதாக Cricbuzz சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரூ.2 கோடிக்கு மிட்செல் மார்ஷை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த சீசனின் முதல் போட்டியிலேயே கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மிட்செல் மார்ஷ் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வருடமும் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரிலில் இருந்து வெளியேற உள்ளார். அதனால் அவருக்கு பதிலாக, சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஒருவரை எடுக்க சன்ரைசர்ஸ் அணி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்