இந்த '11 பேரு' ஆடுனா சும்மா ஜகாவா இருக்கும்... ஸ்ரீசாந்தின் டி 20 உலக கோப்பை 'லெவன்'... டீம்'ல 'ஹர்பஜன் சிங்' வேற இருக்காரு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் போட்டிகளில் தன் மீதான தடை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக கேரள ரஞ்சி அணிக்காக விளையாடவுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்நிலையில், 'கிரிக்கெட் அடிக்டர்' சேனலிற்கு அளித்த பேட்டியில் டி 20 உலக கோப்பைக்கான ஆடும் லெவன் அணியை அவர் தேர்வு செய்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், அவருடன் இணைந்து ஷிகார் தவான் அல்லது சஞ்சு சாம்சன் களமிறங்கலாம் என தெரிவித்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்திலும், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்க வேண்டும் என்றார்.

ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து பந்து வீச்சாளர் வரிசையில், ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் தோனி, கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கு பின்னர் எந்தத்தொடரிலும் அணியில் இடம்பெறவில்லை. சுரேஷ் ரெய்னாவும் அணியில் இடம்பெற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. ஹர்பஜன் சிங் 2016 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பின்னர் எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் ஆடவில்லை. அவர்களை ஸ்ரீசாந்த் அணியில் தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அதே போல, அணியின் 12 வது வீரராக தன்னையே ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்த் தேர்வு செய்த டி 20 உலக கோப்பை ஆடும் லெவன் வீரர்கள் : ரோகித் சர்மா, ஷிகர் தவான்/சஞ்சு சாம்சன், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீசாந்த்(12 வது வீரர்)

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்