'19 நாட்கள்.. 19 வயதில்'.. 'அடுத்தடுத்து 5 தங்கங்கள்' .. கலக்கிய இந்தியாவின் 'தங்கமங்கை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

400 மீட்டர் பிரிவுக்கான சர்வதேச தடகளப் போட்டி செக் குடியரசின் நேவே மஸ்டோ நகரில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ஓடிய ஹிமா தாஸ் 52.09 விநாடிகளில் போட்டிக்கான தூரத்தைக் கடந்து ஓடி தங்கம் வென்று சாதனை படைத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்ட ஹிமா தாஸ், முதுகு வலியால் ஓடுவதற்கு சிரமப்பட்டார். முன்னதாக இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடந்த ஆசிய போட்டியில் 50.79 விநாடிகளில் இதே தூரத்தைக் கடந்ததுதான், ஹிமாதாஸின் பெஸ்ட் டிராக் ரெக்கார்டாகப் பார்க்கப்படுகிறது. 

முன்னதாக போலந்தில் கடந்த 2-ஆம் தேதி நடந்த சர்வதேச போட்டியில் 200 மீட்டர் பிரிவிலும், 7-ஆம் தேதி நடந்த இன்னொரு சர்வதேச போட்டியில் 200 மீட்டர் பிரிவிலும் கலந்துகொண்டு முதல் 2 தங்கங்களை வென்றார். இதனைத் தொடர்ந்து மிக அண்மையில் செக் குடியரசில் 200 மீட்டர் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற 2 போட்டியிலும், நேற்று நடந்த 400 மீட்டர் பிரிவிலும் கலந்துகொண்டு 3 தங்கங்களை வென்றார். மொத்தமாக இந்த சர்வதேச தடகளப் போட்டிகளில் விளையாண்ட இந்த தொடர்ச்சியான 19 நாட்களுக்குள் 5 தங்கங்களை வென்றுள்ளார்.

இந்த சாதனைகளால், திங் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் 19 வயதே ஆன இந்த அஸ்ஸாம் மாணவி ஹிமா தாஸ் தற்போது உலகநாடுகளையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

HIMADAS, HIMADASOURPRIDE

மற்ற செய்திகள்