"என்னய்யா ஏலம் எடுத்து வச்சிருக்கீங்க..அவருக்கெல்லாம் ஓவர் தொகை..மும்பை இந்தியன்ஸை டேமேஜ் செய்த ஆஸி.வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற்றது. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

Advertising
>
Advertising

இஷான் கிஷன்

ஏலத்தின் முதல்நாளில் இஷான் கிஷனை எடுக்க பல்வேறு அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில் ரூ 15.25 கோடிக்கு அவரை வாங்கியது மும்பை அணி நிர்வாகம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது இந்திய வீரர் என்னும் பெருமையை இஷான் கிஷோன் பெற்றுள்ளார்.ஐபிஎல் 2008ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர் ஆவார்.

அதேபோல, இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரை எடுக்க மும்பை அணி ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டியது. ஆர்ச்சரை எடுக்க சன் ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டிபோட்ட நிலையில் 8 கோடி கொடுத்து ஆர்ச்சரை வாங்கியது மும்பை. இதை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களில் இரண்டு முறை முழங்கை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சர் 2022 ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிந்திருந்தும் மும்பை அணி அவரை தேர்வு செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹாக்," ஆர்ச்சருக்கு 8 கோடி ரூபாய் கொடுத்தது ரிஸ்க்கான விஷயம்" என்றார்.

ரிஸ்க்

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ,"இஷான் கிஷனுக்கு 15 கோடி செலவழித்த பிறகு ஆர்ச்சருக்கு 8 கோடி ரூபாய் செலவு செய்வது மிகப்பெரிய ரிஸ்க். கடந்த 18 மாதங்களில் அவருக்கு இரண்டு முழங்கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இது ஒரு வேகப்பந்து வீச்சாளர் அடையக்கூடிய மிக மோசமான காயம். மும்பை அணி ரோஹித், கிஷன் மற்றும் சூர்யா மற்றும் டேவிட் என பேட்டிங் ஆர்டர் நம்பர்.4 இல் ஒரு வலிமையான டாப் ஆர்டரைக் கொண்டுள்ளனர். இதுவும் ஆபத்து. 5வது இடத்தில் யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வி" என்றார்.

ஃபினிஷரே இல்லை..

மும்பை அணியின் ஏலம் எடுத்த முறையை விமர்சித்த ஹாக் பாண்டியா சகோதரர்கள் போன்ற பினிஷர்கள் யாரும் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவு என அவர் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் பேசுகையில்," மும்பை அணியின் தலைவலி அவர்களது பந்துவீச்சில் இருந்து துவங்குகிறது. ஆழமான பந்துவீச்சாளர்கள் யாருமில்லை குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள். பாண்டியா சகோதரர்கள் போன்ற பினிஷர்கள் இல்லை. சந்தேகமே இல்லாமல் MI இதுவரை கண்டிராத மிக மோசமான ஏலங்களில் இதுவும் ஒன்றாகும்" என்றார்.

CRICKET, IPL, CRICKET, IPL, MUMBAIINDIANS, ஐபிஎல், மும்பைஇந்தியன்ஸ், கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்