"கிரிக்கெட் பிளேயர்க்கே Tough கொடுப்பாரு போலயே".. ஒற்றைக் கையில் கேட்ச்.. "பாத்த எல்லாருமே ஒரு நிமிஷம் மிரண்டு போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று தற்போது முடிவடைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'மருமகளுக்காக கருவை சுமந்த மாமியார்.. மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்தார்'.. உலக அளவில் வைரலான 56 வயது பெண்மணி..

இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

குரூப் 1 ல் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற, இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்து அணி அடுத்ததாக தகுதி பெற்றிருந்தது. அதே போல, குரூப் 2  வில், தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைய அரை இறுதி வாய்ப்பை அவர்கள் இழந்தனர். இதனால், இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற, அடுத்ததாக வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் என்ற நிலையும் இருந்தது. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது. தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரை இறுதி போட்டி, நவம்பர் 09 ஆம் தேதியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதனிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி இருந்த போட்டியில், மைதானத்திற்கு வெளியேற இருந்த நபர் ஒருவர் எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

நெதர்லாந்து வீரர் Colin Ackermann அடித்த அதிரடியான சிக்ஸ் ஒன்று, மைதானத்தை விட்டு வெளியே போனது. அப்போது அங்கே இருந்த நபர் ஒருவர், மிகவும் அசாதாரணமாக அந்த பந்தை ஒற்றைக் கையில் கேட்ச் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். இது தொடர்பான வீடியோவை ICC தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2022 டி 20 உலக கோப்பையின் சிறந்த கேட்ச்களில் ஒன்று" என குறிப்பிட்டுள்ளது. கிரிக்கெட் வீரரை போல மைதானத்திற்கு வெளியே இருந்த நபர் எடுத்த கேட்ச் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

 

Also Read | Rohit Sharma Fan : மைதானத்தில் திடீரென அழுதுகொண்டே ஓடிவந்த ரோகித் ரசிகரால் பரபரப்பு..! ரூ 6.5 லட்சம் அபராதமா.?

CRICKET, T20 WORLD CUP, COLIN ACKERMANN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்