கொஞ்ச பேர்கிட்ட தான் இந்த ‘ஸ்பெஷல்’ டேலண்ட் இருக்கும்.. இளம் ‘தமிழக’ வீரரை தாறுமாறாக புகழ்ந்த வாசிம் ஜாபர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக வீரரை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

சமீபத்தில் சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் மோதின. இப்போட்டியில் கர்நாடாகவை வீழ்த்தி தமிழ்நாடு கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக தமிழக அணியின் ஷாருக்கான் இருந்தார். 6-வது வீரராக களமிறங்கிய அவர், 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை என இருந்தபோது சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதனால் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ஷாருக்கானை பாராட்டிப் பேசியுள்ளார். அதில், ‘இந்தியாவில் நிறைய திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். 6-வது, 7-வது போன்ற பின்வரிசையில் இறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது.

அதில் ஷாருக்கான் பின்வரிசையில் விளையாட திறமையான வீரர். இவரை போன்ற வீரர் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அதேபோல் பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு பவர் ஹிட்டிங் அடிக்கும் திறமை இருக்க வேண்டும். இதில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்தை கூட ஷாருக்கான் எளிதாக சிக்சர் அடித்து அசத்துகிறார்.

இதுமட்டுமல்லாமல் 14, 15 ஓவர்கள் கழித்து இறங்கும் இவர் அதிரடியாக விளையாட ஆரம்பிக்கிறார். இப்படி சிறப்பாக ஆடி வருவதால் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது நிச்சயம். டி20 அணியில் மட்டுமல்ல இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் விளையாட தகுதியானவர். நிச்சயம் ஷாருக்கான் ஒரு ஸ்பெஷல் பிளேயர் தான்’ என வாசிம் ஜாபர் புகழ்ந்து பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடரில் நாங்கள் கொடுக்கும் அறிகுறிகளைத் ஷாருக்கான் நன்றாக கவனிக்கிறார். அதனை வலைப்பயிற்சியிலும் உடனே பயிற்சி செய்து பார்க்கிறார். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்கும் பலம் அவரிடம் இருக்கிறது. நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார்’ என வாசிம் ஜாபர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு வாசிம் ஜாபர் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

WASIMJAFFER, SHAHRUKHKHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்