Kohli - BCCI விவகாரம்.. இப்டி ஒரு பிளான் வேற கங்குலி போட்டாரா??.. மீண்டும் வெடித்த 'சர்ச்சை'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கோலி - பிசிசிஐ விவகாரம் ஓய்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த மறுநாளே, கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.

கோலியின் இந்த திடீர் முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே போல, பல கிரிக்கெட் பிரபலங்களும் இது பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.

அதிர்ச்சி முடிவு

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெயர் எடுத்த விராட் கோலி, 33 வயதிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தது, பலரை சோகத்தில் ஆழ்த்தியது.



இந்திய அணிக்காக அதிகம் டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டன், அதிக டெஸ்ட் போட்டிகள் தலைமை தாங்கிய இந்திய கேப்டன் என்ற பெருமை எல்லாம் கோலிக்கு உண்டு. அப்படி இருந்தும், அவர் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.

விருப்பம்

கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பைத் தொடர் முடிவடைந்ததும், டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து தான் விலகப் போவதாக விராட் கோலி அறிவித்தார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் தலைமை தாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார்.

சரிப்பட்டு வராது

ஆனால், டி 20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய பிறகு, ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்திருந்தது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் மற்றும் டி 20 போட்டி என இரண்டிலும் வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால், அது இந்திய அணியை பொறுத்தவரையில் சரிப்பட்டு வராது. அதனால் தான், கோலியை மாற்றி விட்டு, இரண்டிலும் ரோஹித்தை கேப்டனாக நியமித்தோம்.

கருத்தை மறுத்த கோலி

டி 20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய போது, அவரை தொடர்ந்து கேப்டனாக செயல்பட வலியுறுத்தினோம். ஆனால், அதனை கோலி ஏற்றுக் கொள்ளவில்லை' என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக பேசிய கோலி, கங்குலியின் கருத்தை மறுத்தார்.

மிகப்பெரிய சர்ச்சை

'நான் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, என்னை தொடர்ந்து செயல்பட வேண்டி, பிசிசிஐ தரப்பில் யாருமே கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை விலக்கியது கூட, கடைசி நேரத்தில் தான் என்னிடம் தெரிவிக்கப்பட்டது' என கோலி கூறியது, இந்திய அணிக்குள் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

கடும் விமர்சனம்

பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு இடையே தெளிவான உரையாடல் இல்லை என்றும், ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது என்றும், பலர் விமர்சனத்தை எழுப்பியிருந்தனர். கோலி - பிசிசிஐ விவாகரம் ஓரளவுக்கு  தற்போது ஓய்ந்து வந்த நிலையில், மீண்டும் இது தொடர்பாக ஒரு பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிக்கு நோட்டீஸ்?

அதாவது, பிசிசிஐ சார்பில் தன்னை யாரும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளவில்லை என கோலி தெரிவித்தது பற்றி, தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என கங்குலி, கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக, தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக கங்குலி சில பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இந்திய அணியை பாதிக்கும்

ஆனால், இது பற்றி பிசிசிஐ அதிகாரிகளுடன் பேசிய போது, தென்னாப்பிரிக்க தொடர் அடுத்து இருப்பதால், நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், டெஸ்ட் கேப்டன் கோலி மற்றும் அணி வீரர்களை நிச்சயம் அது பாதிக்கும் என்பதால், மற்ற அதிகாரிகள் கங்குலியிடம் வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தான், நோட்டீஸ் அனுப்பும் எண்ணத்தை கங்குலி மாற்றியுள்ளார்.

கோலி - பிசிசிஐ விவகாரத்தில் மாறி மாறி கருத்துக்கள் மட்டுமே பரிமாறப்பட்டு வந்த நிலையில், தற்போது அடுத்த லெவலுக்கும் இந்த பிரச்சனையைக் கொண்டு செல்ல, கங்குலி தயாராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SOURAVGANGULY, VIRATKOHLI, BCCI, பிசிசிஐ, சவுரவ் கங்குலி, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்