‘எல்லாவிதமான போட்டிக்கும் இவர்தான் தீர்வு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇனி வரும் காலங்களில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட ரிஷப் பந்த் தான் சரியாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு, இளம் வீரரான ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக களமிறக்கியுள்ளதாக, இந்திய கிரிகெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். எனினும் பேட்டிங்கில் அவர் சோபிக்கவில்லை என்று, அவர் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏனெனில், இந்திய அணியின் மூத்த வீரரான தோனி, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘உலகக் கோப்பையின்போது இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனை, தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையில், இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு கேப்டனின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த்திற்கு தான் அதிக ஆதரவு தேவைப்படுகிறது. எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும், ரிஷப் பந்தே விக்கெட் கீப்பராக செயல்படுவதே, இந்திய அணிக்கான தீர்வு’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..! வைரல் வீடியோ..!
- ‘தன் இஷ்டத்துக்கு எல்லாம்’.. ‘இந்தியாவுக்காக விளையாட முடியாது’.. ‘தோனி மீது பிரபல வீரர் காட்டம்’..
- ‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!
- அவுட்டா? நானா?...அதெல்லாம் இல்ல..மறுபடியும் 'பந்து' போடுங்க!
- Watch Video: திடீரென 'காதலை' சொல்லிய ரசிகை... 'திகைத்து'ப்போன வீரர்!
- ‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..!
- Watch Video: பாகிஸ்தானுக்கு எதிரா...தோனி 'சட்டை'யைக் கழட்டுன நாள்!
- ‘தல’ தோனியின் திட்டம் இதுதான்’... ‘வெளியான புதுத் தகவல்’!
- 'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு!
- ‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..?