இந்திய அணியின் கோச் ஆக வர இவரு ஆசைப்பட்டாரா?- சவுரவ் கங்குலி உடைத்த உண்மை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சில வாரங்களுக்கு முன்னர் தான் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்றார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ - யின் தலைவர் சவுரவ் கங்குலி, அணியின் பயிற்சியாளராக வர விவிஎஸ் லட்சுமணுக்கு அதிக விருப்பம் இருந்ததாக குபீர் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘லட்சுமண் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக வேண்டும் என்று அதிகம் விருப்பப்பட்டார். அது இப்போதைக்கு சாத்தியமான காரியம் இல்லை. ஆனால், லட்சுமணுக்கு கூடிய விரைவில் இல்லை என்றாலும், கண்டிப்பாக அவரது ஆசை கைகூடும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று ஓப்பனாக பேசியுள்ளார்.
ராகுல் டிராவிட், இந்தியாவின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் முன்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்தார். தற்போது டிராவிட், கோச் ஆக பதவியேற்றுள்ள நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக லட்சுமண் பொறுப்பேற்று உள்ளார். டிராவிட், அந்தப் பதவியில் சுமார் 4 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பொறுப்புகளுடன் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளுக்கும் டிராவிட் தான் பயிற்சியாளராக செயல்பட்டார்.
லட்சுமண் பற்றி வெளிப்படையாக பேசியுள்ள கங்குலி, டிராவிட் குறித்தும் ஓர் ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்க விருப்பமில்லை எனவும் கங்குலி தான் அவரது மனதை மாற்றினார் என்றும் கூறியுள்ளார்.
‘ராகுல் தான் இந்தியாவின் அடுத்தப் பயிற்சியாளராக வர வேண்டும் என்று வெகு நாட்களாகவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. காரணம், இந்திய அணி, ஓர் அண்டில் பல மாதங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடும். இது அவருக்கு உகந்ததாக இல்லை. கிட்டத்தட்ட ஓர் ஆண்டில் 8 அல்லது 9 மாதங்கள் அவர் அணியுடன் இருக்க நேரிடும்.
இது அவரது குடும்பத்தை பாதிக்கும் என்று கருதினார். குறிப்பாக அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் சரிபட்டு வராது என்று யோசித்தார். ஆனால், அவரை ஒரு வழியாக பயிற்சியாளராக பொறுப்பேற்க நாங்கள் ஒப்புக் கொள்ள வைத்தோம்’ என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
டிராவிட், நடந்து முடிந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பயிற்சியாளராக அறிமுகம் ஆனார். அவர் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி, வெற்றிவாகை சூடியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவரு அப்படி நெனச்சதே இல்ல.." புதிதாக எழுந்த 'குரல்'.. 'கோலி' விவகாரத்தில் 'முடிவு' கிடைக்குமா??
- ‘எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன் பாருங்க’- ராகுல் டிராவிட் உடனான 17 ஆண்டுகால நினைவுகளைப் பகிரும் இளம் வீரர்..!
- ஆட்டத்துல அறிமுகம் செய்துட்டு 'இந்த' பவுலருக்கு ஏன் ரோகித் வாய்ப்பு கொடுக்கல?- முன்னாள் இந்திய வீரரின் 'டவுட்'..!
- ‘தோனி’கிட்ட இருந்து தொடங்குன ‘மாற்றம்’… இன்னைக்கும் நிக்குதுன்னா..!- புகழ்ந்து தள்ளும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!
- ‘என்னங்க இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு..! கொஞ்சம் டைம் குடுங்க!’- இந்திய ரசிகர்களுக்கு முன்னாள் வீரரின் கோரிக்கை!
- "எப்போ பார்த்தாலும் ‘அப்படி’ கூப்டறது ஒரு ஃபேஷன் ஆய்டுச்சுல உங்களுக்கெல்லாம்..?"- யாரை விளாசுகிறார் டிராவிட்..?
- ‘அன்னைக்கும் நீங்கதான் கூட நின்னீங்க… இன்னைக்கும் நீங்கதான் நிக்கிறீங்க..!- ‘டச்சிங்’ ஆக பேசிய ரோகித் சர்மா..!
- ‘என்னது டிராவிட் வீட்டிலிருந்து வந்த போன் கால் தான் காரணமா?’- என்ன சொல்றீங்க கங்குலி?- டிராவிட் புது கோச் ஆனது எப்படி?
- “இது டி20-ங்க.. 50 ஓவர் மாதிரியா ஆடுவீங்க?!”.. ”பேசாம நான் சொல்றத செய்ங்க” ... இந்திய அணிக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானின் ‘நச்’ ஐடியா!
- "அவங்கள எல்லாம் தோக்கடிக்க இந்தியாவோட 'C' டீமே போதும்.. சும்மா 'ஃபயரா' இருக்காங்க.." 'முன்னாள்' வீரர் 'அதிரடி' கருத்து!!