"விராத் கோலியின் மோசமான பார்ம்.. அடுத்து இதான் நடக்கும்".. முதன்முறையாக போட்டுடைத்த சவுரவ் கங்குலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான பார்மில் இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி.

Advertising
>
Advertising

Also Read | திருமண நிகழ்ச்சியில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. வேகமாக அறைக்குள் சென்ற மர்ம நபர்??.. கண்ணீர் விட்ட குடும்பம்

2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதே போல அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இது சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பிறகு கோலியின் கிரிக்கெட்  ஆட்டங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் 100 போட்டிகள் கிட்டத்தட்ட ஆடியும் கோலி சதம் அடிக்காதது,  தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது ஃபார்மில் இல்லாத ஆட்டம் என பல விஷயங்களும் பேசுபொருளானது.

தற்போதைய ஐபிஎல் தொடரில் அவரது கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் 1, 12, 0, 0 மற்றும் 9 ரன்களுடன், இரண்டு கோல்டன் டக் ஆகியுள்ளார்.

கோலி எதிரணியின் பந்துவீச்சு தாக்குதலில் குறிப்பாக டிரென்ட் போல்ட்டின் முதல் ஓவரிலேயே மூன்று முறை அவுட் ஆனது பேசு பொருளாகி உள்ளது.

யுவராஜ், கவாஸ்கர் முதல் சாஸ்திரி வரை, கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே கோலியைப் பற்றியும், அவர் தனது பார்முக்கு திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.  ​​

கோலியுடன் சமீபத்திய மோதலை கடைபிடித்த இந்திய கிரிக்கெட்டின் காட் பாதரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, கோலி - ரோகித் பற்றி பேசியுள்ளார். அதில்,"அவர்கள் சிறந்த வீரர்கள், அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். விரைவில் அவர்கள் ரன்களை அடிக்கத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். விராட் கோலியின் தலையில் என்ன ஓடுகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் தனது ஃபார்மை மீண்டும் பெறுவார், என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த வீரர்" என்று கங்குலி  கூறினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, VIRAT KOHLI, SOURAV GANGULY, விராத் கோலி, சவுரவ் கங்குலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்