"இந்த டீம்கள்ல இருந்து அந்த ரெண்டு ப்ளேயர்ஸ் இந்திய அணிக்கு ஆடுவாங்க" - BCCI தலைவர் கங்குலி சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2022 ஐபிஎல் தொடரில் சில இளம் வீரர்களின் திறமைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூர்ந்து கவனித்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பீட்டர்சன் கூட சண்டை.." மரணமடைந்த ஆண்ட்ரு சைமண்ட்ஸ் பற்றி நெகிழ்ந்து பேசிய மேத்யூ ஹைடன்!

சிறந்த சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு எதிராக தங்கள் திறமையை வெளிப்படுத்த  இந்திய & சர்வதேச அணியில் இல்லாத வீரர்களுக்கு சரியான தளத்தை IPL வழங்கி உதவியுள்ளது.

2022 ஐபிஎல் சில திறமையான வீரர்களை கண்டுள்ளது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கைப் பற்றி கங்குலி பாராட்டி பேசினார்.

உம்ரான் மாலிக், ஐபிஎல் 2022 இல் தனது வேகமான பந்துவீச்சு மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனால் பிரபலமாகி உள்ளார். இந்த சீசனில் 12 ஆட்டங்களில், உம்ரான் மாலிக் ஒரு ஐந்து விக்கெட் ஹாளுடன் 22.05 சராசரியில் 18 விக்கெட்டுகளை எடுத்தார். தற்போது இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அன்கேப்ட் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

கங்குலி தனது பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் சென்னையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சீசனில் ஏழு ஆட்டங்களில், அவர் எட்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் குறிப்பாக டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் குறித்து கங்குலி பேசும் போது, “எத்தனை பேர் 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்? அதிகம் இல்லை. இவர்கள் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இருப்பினும், இவர்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். உம்ரான் வேகமானவர். எனக்கு குல்தீப் சென் பிடிக்கும். அத்துடன் டி நடராஜன் மீண்டும் வந்துள்ளார். நம்மிடம் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி உள்ளார்கள். இருப்பினும், இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்வாளர்களின் கையில் உள்ளது,”என்று கங்குலி கூறினார்.

இந்த சீசனில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் குறித்தும் கங்குலி பேசினார். அதில், “பவுலர்களின் ஆதிக்கத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மும்பை மற்றும் புனேவில் விக்கெட்டுகள் மிகவும் சிறப்பாக உள்ளன, மேலும் அவை நல்ல பவுன்ஸை கொடுக்கின்றன. வேக பந்து வீச்சாளர்கள் தவிர சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள்” என்றார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, URMAN MALIK, KULDEEP SEN, SOURAV GANGULY, RAJASTHAN ROYALS, SRH PLAYERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்