"இந்தியா 'டீம்' பத்தி எல்லாம் 'கங்குலி'க்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல.. அவரோட வேலை ஒன்னு மட்டும் தான்.." 'சர்ச்சை'யை ஏற்படுத்திய 'கருத்து'!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி கண்ட கேப்டன்களில், மிகச் சிறந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. 2003 ஆம் ஆண்டு, உலக கோப்பை இறுதி போட்டி வரை இந்திய அணி முன்னேறியதில் கங்குலிக்கு முக்கிய பங்குண்டு.

அதே போல, கங்குலி (Ganguly) கேப்டனாக இருந்த சமயத்தில், பல முக்கிய தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு, இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் (Greg Chappell) நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, கங்குலி மற்றும் சேப்பல் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி, அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக டிராவிட் நியமிக்கப்பட்ட நிலையில், கங்குலிக்கு அதிக வாய்ப்புகளும் அணியில் கிடைக்கவில்லை. அப்போது தான், பல இளம் வீரர்கள் இந்திய அணியில் நுழையவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. டிராவிட் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வி அடைந்து, லீக் சுற்றுடனேயே மோசமாக இந்திய அணி வெளியேறியது.

சிறந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் இருந்தும், அதிர்ச்சிமிக்க இந்த தோல்வியால், டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல, கிரேக் சேப்பலும், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் நீங்கினார். இந்த படுதோல்வியின் காரணமாக, கிரேக் சேப்பலுக்கும், அணியின் சீனியர் வீரர்களுக்கும் மாறி மாறி விமர்சனங்களும் இருந்தன.

இந்நிலையில், இது பற்றி தற்போது பேசியுள்ள கிரேக் சேப்பல், சில சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். 'இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இருக்க வேண்டி, கங்குலி தான் என்னை அணுகினார். இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் இருந்த போது, மிகவும் சவாலாக இருந்தது. கங்குலி கேப்டனாக இருப்பதில் சிக்கல்கள் இருந்தன.


அவர் கடினமாக உழைக்க விரும்பவில்லை. மேலும், தனது கிரிக்கெட்டை மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை கங்குலி எடுக்கவில்லை. ஒரு கேப்டனாக அணியில் நீடிக்கவே விரும்பினார். அதனைக் கொண்டு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தான் எண்ணினார்.

ஆனால், டிராவிட்டைப் பொறுத்தவரையில், கிரிக்கெட் உலகில் இந்திய அணியைச் சிறந்த அணியாக மாற்ற எண்ணினார். துரதிர்ஷ்டவசமாக, அணியில் உள்ள மற்ற சீனியர் வீரர்கள் யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை. அனைவரும், அணியில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே தான் எண்ணினர்' என கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்