"தோனி கூட அவர கம்பேர் பண்றதா??, நியாயமே இல்லங்க.." கங்குலி சொன்ன பரபரப்பு கருத்து

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, தற்போது பிளே ஆப் சுற்றுகள் நடந்து வருகிறது.

Advertising
>
Advertising

இதன் முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், தற்போது (24.05.2022) மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்த சிஎஸ்கே, இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விட்டது.

சிறந்த கேப்டன் எம்.எஸ். தோனி

அடுத்த சீசனில் தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவார் என அறிவித்துள்ளதால், நிச்சயம் அவரது தலைமையில், அடுத்த சீசனில் சிஎஸ்கே கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே, சமீப காலமாக தோனியுடன் இளம் வீரர் ஒருவரை ஒப்பிட்டு பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்த தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட போது, 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை இந்திய அணி வென்று சாதனை புரிந்துள்ளது.

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்

தோனி இந்திய அணிக்காக ஆடிய போது, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வரும் ரிஷப் பண்ட்டை தோனியுடன் பலரும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை தலைமை தாங்கி வரும் ரிஷப் பண்ட், கடந்த சீசனில், சிறந்த முறையில் அணியை வழி நடத்தியிருந்தார்.

ஆனால், நடப்பு தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் எடுத்த பல முடிவுகள் அந்த அணிக்கு பாதகமாக அமைந்து இருந்தது. அதுவும் குறிப்பாக கடைசி லீக் போட்டியில், அவர் டிஆர்எஸ் எடுக்காமல் போனது, பெரிய அளவில் சர்ச்சைகளை உண்டு பண்ணி இருந்தது. இதனால் ரிஷப் பண்ட்டின் முடிவை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

கங்குலி சொன்னது என்ன?

இதற்கு மத்தியில் ரிஷப்பை எப்படி தோனியுடன் ஒப்பிட முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியும் தோனி - ரிஷப் ஒப்பீடு குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.


இதுபற்றி பேசிய கங்குலி, " தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடவே கூடாது. தோனியை பொறுத்த வரையில், அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஐபிஎல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார் தோனி. இதனால் தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடுவது நியாயமே இல்லை" என கங்குலி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

MSDHONI, RISHABHPANT, SOURAVGANGULY, கங்குலி, தோனி, ரிஷப் பண்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்