VIDEO: ‘அப்படியே சூர்யகுமாருக்கு நடந்தது மாதிரியே இருக்கே’!.. ‘ஆனா முடிவுதான் வேற’.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியின்போது ஏற்பட்ட சாஃப்ட் சிக்னல் சர்ச்சை போலவே நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமீசன் பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வங்கதேச அணியின் தமீம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியின் 15-வது ஓவரை நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமீசன் வீசினார். இதனை எதிர்கொண்ட வங்கதேச வீரர் தமீம் இக்பால், பந்தை நேராக பவுலரை நோக்கி அடித்தார். உடனே கைல் ஜேமீசன் அதை கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் கேட்ச் பிடித்தபோது பந்து மைதானத்தில் பட்டதுபோல் இருந்ததால், களத்தில் இருந்த அம்பயர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டார்.

உடனே இதை மூன்றாவது அம்பயர் சோதனையிட்டு ‘நாட் அவுட்’ என கொடுத்தார். இதனால் தமீம் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அப்போது அவர் 34 ரன்கள் அடித்திருந்தார். இதன்பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி தமீம் இக்பால் வெளியேறினார். இந்த சாஃப்ட் சிக்னலால் தமீமிக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டதால் கைல் ஜேமீசன் அதிர்ப்தி அடைந்தார்.

முன்னதாக இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியின்போதும் இதேபோல் நடைபெற்றது. அதில், சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் கேட்ச் பிடித்தார். இது களத்தில் நின்ற அம்பயருக்கு சந்தேகத்தை எழுப்பவே, உடனே மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டார். ஆனால் மூன்றாவது அம்பயர் ‘அவுட்’ என கொடுத்தார்.

இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  அம்பயரின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்