Video : "வேற லெவல் 'கேட்ச்'ங்க இது... கண்ணையே நம்ப முடியல.." 'ஸ்லிப்' ஃபீல்டர் செய்த மகத்தான 'சம்பவம்'... பிரமித்து போன 'நெட்டிசன்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் போட்டிகளில் கீப்பருக்கு அடுத்து ஸ்லிப் பொசிஷனில் நிற்பது என்பது மிகவும் சவாலான காரியமாகும். அதுவும், ஒரு நொடி கவனத்தை சிதற விட்டால் கூட, ஸ்லிப்பில் நிற்கும் வீரரை பந்து கடந்து விடும்.

ராகுல் டிராவிட், மார்க் வாக், ஜெயவர்த்தனே, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், ஸ்லிப் ஏரியாவில் ஃபீல்டிங் செய்வதில் பெயர் போன நிலையில், தற்போது பென் ஸ்டோக்ஸ், ரஹானே, டுபிளஸிஸ், ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள், தற்போதைய காலகட்டங்களில் சிறப்பாக ஸ்லிப்பில் நின்று வருகின்றனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஸ்லிப்பில் நின்றிருந்த வீரர் பிடித்த கேட்ச் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த அந்த வீரர், பேட்ஸ்மேன் ஸ்வீப் ஷாட்டிற்கு முயல்வதைக் கண்டதும், உடனடியாக லெக் ஸ்லிப் பக்கம் பறந்தார். மறுநொடியே, பேட்ஸ்மேன் பேட்டில் பட்ட பந்து, கீப்பரைத் தாண்டிப் போன நிலையில், திடீரென பறந்து பந்தை கேட்ச் செய்தார்.

 

ஜாண்ட்டி ரோட்ஸ், டுபிளஸிஸ் போன்ற சிறந்த ஃபீல்டர்களை உருவாக்கிய தென்னாப்பிரிக்க மண்ணில், பேட்ஸ்மேன் அடிக்கப் போகும் திசையை மிகக் கச்சிதமாக கணித்து, இப்படி திறம்பட ஃபீல்டர் ஒருவர் பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்