‘மாற்றப்பட்ட தேதி’!.. இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும்..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி, நேரம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று (13.07.2021) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இந்த போட்டிக்கான அட்டவணை சற்று மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாற்றி அமைக்கப்பட்ட இப்போட்டிக்களுக்கான தேதி, நேரம் குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 18-ம் தேதி துவங்குகிறது. அதன்பின்னர் 2-வது ஒருநாள் போட்டி 20-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

அதேபோல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் 25-ம் தேதி துவங்குகிறது. இதனை அடுத்து 27-ம் தேதி 2-வது போட்டியும், 29-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கும், டி20 போட்டிகள் இரவு 8 மணிக்கும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் சோனி லைவ் ஆப் மூலம் செல்போனில் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்